Posts

Showing posts from August, 2015

காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்!

Image
காலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்! வி தவிதமான வீட்டு அலங்கார மாதிரிகள், கன்டெய்னர் லாரி மாடல் வீடு, புதுமையான வீடியோ கேம்கள், மனதை அள்ளும் புகைப்படங்கள் என்று தங்களின் கைவண்ணத்தை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர் சென்னை ‘ஐ-காட்’ டிசைன் மற்றும் மீடியா கல்லூரி மாணவ - மாணவிகள். இன்டீரியர் டிசைன், அனிமேஷன் கேம் டிசைன், போட்டோகிராஃபி என்று தங்கள் துறைகளில் தாங்கள் உருவாக்கிய படைப்புகள் பற்றி அந்த இளம் எனர்ஜிகள் பேசும்போது... கனவுகள் சிறகடிக்கின்றன! ‘‘மழைத்துளி சொட்டி கீழே விழும்போது அவ்வளவு அழகா இருக்கும். ஆனா, அதுக்கு நிலையான உருவம் கிடையாது. கூம்பு வடிவா, பெரிய திவலையா, ஊசிக்கோடா... இப்படி பல வடிவில இருக்கிற அந்த மழைத்துளிகளைத்தான் என்னோட படைப்புக்கு கருவா எடுத்துக்கிட்டேன். அந்த துளிகளை எல்லாம் வரைஞ்சு, மழைத்துளிகள் மாதிரியே கூம்பு கண்ணாடிகள் செஞ்சு, நடுவுல மஞ்சள் விளக்குகள் பொருத்தி, வீட்டின் மேலே நடுப்பகுதியில் மாட்டினா... மழைத்துளிகள் விழற மாதிரியே இருக்கும்; கண்ணாடி உள்ளேயும் நீர் இ...

கைகொடுக்கும் கிராஃப்ட்!

Image
கைகொடுக்கும் கிராஃப்ட்! சாக்லேட் கிஃப்ட்! ‘‘இ னிப்புகளும் பரிசுகளும் இல்லாமல் விழாக்கள் இல்லை. பரிசுக்குள்ளே இனிப்பு என்றால் டபுள் கொண்டாட்டம்தானே?!’’ என்று ஆவலைத் தூண்டும் கோவை, காந்திநகரைச் சேர்ந்த,‘சிரா’ கிராஃப்ட் ஸ்டோரின் உரிமையாளர் சொர்ணம் திருமால், வீட்டில் எளிமையாகச் செய்யக்கூடிய சாக்லேட் கிஃப்ட் செய்து காட்டுகிறார் இங்கு... தேவையான பொருட்கள்: கைப்பிடியுடன் கூடிய பூக்கூடை, நெட் கிளாத், கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் (சிவப்பு மற்றும் வெள்ளை), கோல்டன் நிற இலைகள், டூத் பிக் குச்சிகள், தெர்மாக்கோல், கத்தரி, க்ளூ ஸ்டிக், ஊசி, நூல். செய்முறை: படம் 1: கூடையைச் சுற்றி நெட் கிளாத் அமையுமாறு வைத்து ஊசியால் மடிப்புகள் வரும்படி தைத்துக் கொள்ளவும். படம் 2: ஊசியால் தைத்த பகுதியை கோல்டன் ரிப்பனால் சுற்றி, பின்பு க்ளூ கொண்டு ஒட்டவும். படம் 3: கூடைக்குள் புகும் அளவுக்கு தெர்மாக்கோலை தயார் செய்து கூடைக்குள் வைக்கவும். படம் 4: நெட் கிளாத் கொண்டு கூடையின் கைப்பிடி முழுவதும் சுற்றிக்கொள்ளவும். படம் 5: நெட் கிளாத் சுற்றப...